கட்டுப்பாட்டு மையத்தில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் (Integrated Command & Control Centre) மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து வியாழக்கிழமை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர்கள் கருப்பசாமி, ஹேமலதா, உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.