எஸ்.என்.எஸ் கலை கல்லூரியில் மாநில அளவிளான பயிலரங்கம்

டாக்டர் எஸ்.என்.எஸ் இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் மாநில அளவிளான பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வை கல்லூரியின் தாளாளர் இராஜலட்சுமி, எஸ்.என்.எஸ் கல்விக்குழுமத்தின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தனர். இதில் பெங்களூரு இன்போ க்லோபல் டெக்னாலஜியின் மனிதவள மேம்பாட்டுத் துறை மேலாளர் வினாயக் பட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாற்றினார். மேலும், நிகழ்வில் எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் செயலர் எஸ்.நளின் விமல் குமார், கல்லூரியின் முதல்வர் அனிதா, துணை முதல்வர் நரேஷ் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.