என்.ஜி.பி மழலையர் பள்ளியின் ஆண்டு விழா

கோவை, என்.ஜி.பி மழலையர் பள்ளியின் ஆண்டு விழா மற்றும் மேல் மழலையர் பள்ளியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கே.எம்.சி.எச் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் இராஜேந்திரன் கலந்துகொண்டு, மாணவர்களின் சிறப்பான வளர்ச்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் பள்ளியைப் பாராட்டி பேசினார். பின்னர், என்.ஜி.பி கல்விக் குழும நிறுவனர் நல்ல ஜி பழனிசாமி, தாளாளர் தவமணி தேவி பழனிசாமி ஆகியோர் மேல் மழலையர் பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு சான்றிதழ்களை வழங்கினார். குழந்தைகள் பட்டமளிப்பு அங்கி மற்றும் தொப்பிகளை அணிந்து மேடைக்கு வந்து சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.