கே.பி.ஆர் கலை கல்லூரியில் ஆடிட்டர்ஸ் கான்க்ளேவ்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி புரொபஷனல் கோச்சிங் விங், வணிகவியல் மற்றும் தொழில்முறை கணக்கியல் துறை ஆகியவை இணைந்து “ஆடிட்டர்ஸ் கான்க்ளேவ்” நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், ஆடிட்டர் ராஜேஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு, நிதி துறையில் ஏற்பட்டு வரும் நவீன மாற்றங்கள் குறித்தும், தொழில் முனைவோர் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் யுக்திகளை பற்றியும் எடுத்துரைத்தனர். வணிகவியல் பட்டப்படிப்புடன் ஆடிட்டர் கல்வி கற்பதன் முக்கியத்துவத்தை மாணவர்களுக்குப் பகிர்ந்துக் கொண்டார். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் கீதா, தலைமை நிர்வாகி பாலுசாமி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.