கே.பி.ஆர் கல்லூரியில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான 200 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கல்லூரியின் தலைவர் கே.பி.ராமசாமி பேசும்போது: இங்கு பயிலும் மாணவர்கள் இங்குள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி, தங்களது பாட அறிவு, திறன்களை, மேம்படுத்துவதற்கும் தகவல் தொடர்பு திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் பாடுபட வேண்டும். அதன் மூலம் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் சிறந்த வேலைவாய்ப்பை பெற முடியும்.

கே.பி.ஆர். கல்லூரியில் வருகின்ற வருடத்திற்கும் சுமார் இரண்டு கோடி ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படஉள்ளது. மேலும் வரும் கல்வி ஆண்டில் கே.பி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேரும் 180 மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

கல்லூரியின் முதல்வர் அகிலா கூறுகையில்: கே.பி.ஆர். வழங்கிவரும் கல்வி உதவித்தொகைகளை பற்றி எடுத்துரைத்தார். அதில் சிறந்த மாணவர்களுக்கான உதவித்தொகை, விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான உதவித்தொகை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான உதவித்தொகை, பணியாளர்களின் குழந்தைகளுக்கான உதவித்தொகை என பல்வேறு பிரிவுகளில் உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.

கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி நூறு சதவிகித மாணவர் சேர்க்கை நிரம்பும் கல்லூரிகளின் பட்டியலில் ஒன்றாக திகழ்கிறது. அத்துடன் பெரும்பாலான மாணவர்கள் முதல் கவுன்சிலிங்கில் முதல் விருப்பமாக கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியை தேர்வு செய்கின்றனர், எனவே தகுதியான மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இக்கல்லூரி ஆரம்பம் முதல் இதுவரை சுமார் 35 கோடிக்கும் அதிகமான கல்வி உதவித் தொகையை வழங்கி உள்ளது என்று குறிப்பிட்டார்.