தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் அதிகபட்சமாக 34, குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.