ஆஸ்கர் வென்ற ஜி.ஆர்.டி கல்லூரியின் முன்னாள் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் வாழ்த்து

95 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றிய குறு ஆவணப்படமான ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ சிறந்த குறு ஆவணப்படத்திற்கான விருதை வென்றுள்ளது.

படத்தின் தயாரிப்பாளர் குனீத்மோங்கா, இயக்குநர் கார்த்திகி செலினா கோன்சால்வ்ஸ் விருதை பெற்றுகொண்டனர்.

இப்படத்தை இயக்கிய கார்த்திகி செலினா கோன்சால்வ்ஸ் ஊட்டியைச் சேர்ந்தவர். கோவை ஜி.ஆர்.டி அறிவியல் கல்லூரியில் 2004 முதல் 2007 வரை விஸ்காம் துறையில் படித்தார். இந்நிலையில் ஜி.ஆர்.டி கல்லூரியின் முன்னாள் மாணவியான இவருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.