இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பின் புதிய தோற்றத்தில் ராகுல் காந்தி

இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பின்னர் முதல்முறையாக, கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விரிவுரையாற்றி இருக்கிறார். இதற்காக தலைமுடி, தாடியை திருத்தம் செய்து புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

ராகுல் காந்தி ஒருவார சுற்றுப்பயணமாக செவ்வாய்க்கிழமை லண்டன் சென்றார். இந்த பயணத்தில், கேம்ப்ரிட்ஜ் பல்கலை மாணவர்களுக்கு மட்டும் எடுக்க இருக்கும் விரிவுரையும் அடங்கும்.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவுரையாளராக இருக்கும் ராகுல் காந்தி, “21ம் நூற்றாண்டின் கேட்டலுக்கான கற்றல்” (Learning to Listen in the 21st Century) என்ற தலைப்பில் மாணவர்களிடம் உரையாற்றினார்.

இந்த நிலையில் புதிய தோற்றத்தில் லண்டன் சென்றுள்ள அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் படங்களில், இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது வளர்ந்த தாடியை ட்ரிம் செய்தும், தலைமுடியை வெட்டியும் புதிய தோற்றத்தில் உள்ளார்.