என்.ஜி.பி கல்லூரியில் 103 வது தேசியக் கருத்தரங்கம்

டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும், கேரளா, பாலக்காடு, தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையமும் இணைந்து “வானவில் கே.ரவியின் படைப்புலகம்” என்னும் பொருண்மையில் 103-வது தேசியக் கருத்தரங்கை நடத்தியது.

இந்நிகழ்வில் முதல்வர் (பொறுப்பு) பானுதேவி தலைமை உரையாற்றினார். கருத்தரங்க மையவுரையினை தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையத்தின் இயக்குனர் ராஜாராம், வானவில் கே.ரவியின் ஆளுமை குறித்தும் படைப்புலகம் குறித்தும் எடுத்துரைத்தார்.

நிகழ்வில் படைப்பாளர் வானவில் கே.ரவி கலந்துகொண்டு ஏற்புரை வழங்கியதோடு, அவரது படைப்பின் பின்புலங்களை எடுத்துக் கூறினார். இதில் ஆய்வுரை வழங்கிய பேராசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.