தமிழகம் வந்துள்ள மத்திய சுற்றுலாத்துறை அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

தமிழகத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, இன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

அதனை தொடர்ந்து நாளை கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பிற்பகல் டெல்லி புறப்படுகிறார்.

இதனை முன்னிட்டு, கோவை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு கோவை மாவட்ட பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாஜக கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், மாநில செயலாளர் ஏ.பி.முருகானந்தம், பேராசிரியர் கனகசபாபதி உள்ளிட்டோர் அவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சாலை மார்க்கமாக திருப்பூர் புறப்பட்டார்.