கொங்குநாடு கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் “காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பெருக்கம்” என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதனை அகரமுதலை தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அறக்கட்டளை மற்றும் WWF-இந்தியா உதவியுடன் உயிர் வேதியியல் துறையும் சூழலியல் மன்றமும் இணைந்து நடத்தினர்.

பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் இருந்து ஆசியர்களும் மாணவர்களும் இதில் கலந்து கொண்டனர். கேரள மத்திய பல்கலைக் கழகத்தின் மூத்த பேராசியர் மற்றும் வைரஸ் துறை விஞ்ஞானி ராஜேந்திர பிளாங்கட்டா  சிறப்புரை ஆற்றினார்.

கல்லூரி முதல்வர் லக்ஷ்மணசாமி தலைமை உரையாற்றினார். அகரமுதலை தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அறக்கட்டளை நிறுவனர் தனலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

சலீம் அலி பறவையியல் ஆராய்ச்சி மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மஹேந்திரன், மத்திய பருத்தி ஆராய்ச்சி மையத்தின் முதுநிலை  விஞ்ஞானி ராஜா, கொங்குநாடு கல்லூரி பேராசியர் ராஜா மற்றும் நீர் அறிவியல் விஞ்ஞானி அருண் வெங்கடேஷ் ஆகியோர் பேசினர்.