கோ-ஆப்டெக்ஸில் ‘பை 2 கெட் 1’ சலுகை துவக்கம்

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் கோ-ஆப்டெக்ஸில் வருடாவருடம் ‘பை 2 கெட் 1’ சலுகைகள் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்த வருடமும் கோவை, வ.உ.சி மைதானம் அருகில் உள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸில் ‘பை 2 கெட் 1’ சலுகை துவங்கியுள்ளது.

கோ- ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் இச்சலுகை மார்ச் 25 வரை வழங்கப்படுகிறது. துவக்க விழாவை கோ-ஆப்டெக்ஸ் மண்டல அலுவலகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் குமரேசன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

முதுநிலை மேலாளர் (ரகம் மற்றும் பகிர்மானம்) நந்த கோபால், துணை மண்டல மேலாளர் அழகு சுந்தரம், விற்பனை நிலைய மேலாளர் செல்வன் மற்றும் பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.