உலக பணக்காரர் பட்டியலில் 22 வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி

அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடி குறித்து, ஹிண்டர்பர்க் ஆய்வு அறிக்கை வெளியான நிலையில், அதானி குழும பங்குகள் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் 2 வது இடத்திலிருந்து 22 வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டுள்ளார்.

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-20 பட்டியலில் இருந்து அவர் வெளியேறியுள்ளார். 57 பில்லியன் டாலர் மதிப்புடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி 2-வது இடத்தில் இருந்து 22 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதற்கு முன் அதானி உலக பணக்காரர் பட்டியலில் முதல் 10 பேர்களில் ஒருவர் மற்றும் ஆசியாவில் இந்தியர்களில் மிகப்பெரிய பணக்காரராக இருந்தார். அண்மையில் இவரை இந்தியாவின் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளி ஆசியாவின் பணக்கார இந்தியர் ஆனார்.

பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பம் முதலிடத்திலும், எலான் மஸ்க் இரண்டாவது இடத்திலும், முகேஷ் அம்பானி 12-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.