ஊடுருவிய மரத்தாவரங்களின் மேலாண்மை குறித்த கருத்தரங்கு

மாநில திட்டக்குழுவின் தமிழ்நாடு மாநில நில பயன்பாட்டு ஆய்வு வாரியம், சென்னை, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம் இணைந்து ஊடுருவிய மரத்தாவரங்களின் மேலாண்மை பற்றிய சர்வதேச கருத்தரங்கை இரண்டு நாட்கள் நடத்தியது.

மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் பயிலரங்கின் வன ஆக்கிரமிப்பு இனங்களால் செய்யப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

தொழில்நுட்ப அமர்வுகளில், மதிப்பு கூட்டல், வாழ்வாதார வாய்ப்புகள், கொள்கை மற்றும் சட்டசிக்கல்கள் போன்ற கருப்பொருள் சிக்கல்கள் பற்றிய விரிவான விவாதங்கள் செய்யபட்டன.

குழு விவாதத்திற்கு மாநில திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அகமது ஆகியோர் தலைமை வகித்தனர்.

கூடுதல் முதன்மை தலைமைக் காப்பாளர் (வேலைத் திட்டம்) அன்வர்தீன், ஐ. எஃப்.எஸ். சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தனது சிறப்புரையில்: சுற்றுச்சூழல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சமூகவியல் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு வன ஆக்கிரமிப்பு உயிரினங்களை நிர்வகிப்பதற்கான உத்திகள் மற்றும் வழிகாட்டுதல்களை வலியுறுத்தினார்.