மலிவு விலையில் தரமான வீடு பெர்ஃபெக்ட் நிறுவனம் சார்பில் அறிமுகம்

கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெறும்  பில்ட் இன்டெக் 2023  எக்ஸ்போவில், கோவையைச் சேர்ந்த பெர்ஃபெக்ட் இன்ஃப்ரா டெக் தனது சமீபத்திய தயாரிப்பான ஷீயர் வால் ஹவுஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இதன் நிர்வாக இயக்குநர் விஜயராகவன் கூறியதாவது: ஷியர் வோல் ஹவுஸ் என்பது மலிவு விலையில் தரமான வீடு தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த நாட்களில் கட்டித்தரப்படுகிறது.

கட்டுமானப் பணியில் எந்த செங்கற்களும் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், நன்கு வடிவமைக்கப்பட்ட ஒற்றைக்கல் உலோக சட்டமும் வலுவான கான்கிரீட்டும் வீட்டின் பெரும்பகுதியை உருவாக்குகின்றன. மற்ற வழக்கமான வீடுகளை போலவே இந்த வீடுகளும் அனைத்து வெப்பநிலையை தாங்கும். நில அதிர்வுகளை தாங்கவும், கட்டிடத்தில் விரிசல் ஏற்படாமல் கட்டிடத்தை பாதுகாக்கும். மேலும் வாடிக்கையாளர்கள் 8 முதல் 10 ஆண்டுகளுக்கு எந்தவொரு பராமரிப்பையும் செய்ய வேண்டியதில்லை.

தரைக்கு விட்ரிஃபைட் டைல்ஸ், வயரிங் மற்றும் பிளம்பிங் வசதிகள் தேவைக்கு ஏற்றாற்போல செய்து தரப்படுகிறது. வீடுகள் மட்டுமின்றி அலுவலகங்கள், குடோன்கள் கூட இந்த முறையில் கட்டலாம். இந்த கட்டுமான முறையைப் பற்றி 8 ஆண்டுகளாக விரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேற்கொண்டதாக விஜயராகவன் கூறினார்.

ஏறக்குறைய 70% இந்திய குடும்பங்கள் தங்களுக்கென சொந்த வீடு இல்லாதவர்களோவோ அல்லது சரியான வீடுகள் இல்லாதவர்களாகவோ உள்ளனர். இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் இன்னும் கிராமங்களில் இருப்பதால், இந்தத் திட்டம் குடிசைகளை கட்டிடங்களாக மாற்றும்.

பெர்ஃபெக்ட் இன்ஃப்ராடெக்ஸ் ஷீயர் ஹவுஸில் பயன்படுத்தப்படும் அனைத்து கட்டுமானப் பொருட்களும் உயர் தரத்தில் இருக்கும். இந்த வகை கட்டுமானத்திற்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் தங்கள் நிறுவனம் தயாரித்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

400 சதுர அடி நிலத்தில் ஷீயர் வால் ஹவுஸ் 15 நாட்களில் கட்டி முடிக்கப்படும். விலையைப் பொறுத்தவரை, 1 BHK வீட்டை வெறும் ரூ. 8 லட்சத்திலும், 750 சதுர அடி நிலத்தில் 2 BHK வீடு ரூ. 12 லட்சம் மற்றும் 980 சதுர அடி நிலத்தில் 3 BHK வீடு ரூ. 16 லட்சத்திலும் கட்டி தரப்படுகிறது என்றார்.

மேலும் தொடர்புக்கு: 9843333434