குறைந்த விலை சேவையை நிறுத்திய ஏர்டெல்

இந்தியாவில் அதிகம் பயன்படுத்த படும் நெட்வொர்க் சேவைகளில் ஒன்றாக ஏர்டெல் நிறுவனம் இருக்கிறது. அது 4G மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் 5G சேவைகளுக்கான பணிகளையும் ஏர்டெல் தொடங்கியுள்ளது. எனவே தற்போது அடிப்படை ரீசார்ஜ் கட்டணத்தை ஏர்டெல் உயர்த்தியுள்ளது.

முன்னதாக ஏர்டெல்லின் அடிப்படை ரீசார்ஜ் விலை ரூபாய் 99ஆக இருந்தது. அதில் 200MB மொபைல் டேட்டா, லோக்கல் மற்றும் இந்திய அழைப்புகளுக்கு நொடிக்கு 2.5பைசா கட்டணத்துடன் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள அடிப்படை பிளனாக இருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த பிளானை முழுமையாக ஏர்டெல் நிறுவனம் நிறுத்திவிட்டு புதிய தொடக்க பிளானை அறுமுகப்படுத்தியுள்ளது.

155ரூபாய்க்கு இதில் 1GB டேட்டா, 300SMS, Unlimited Locals மற்றும் STD அழைப்புகள், இலவச Hello Tune உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகிறது.

தற்போது முதல் கட்டமாக சில முக்கிய நகரங்களில் மட்டும் அமலுக்கு வந்ததாக கூறப்படுகிறது. குறைந்த விலையில் சலுகைகளை நிறுத்தி விட்டு, தொடக்க விலையில் சிறப்பான சேவையை கொடுக்கவே இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.