லயன்ஸ் கிளப் சார்பில் இறகுப்பந்து போட்டி

லயன்ஸ் கிளப் ஆப் இன்டகிரிடி சார்பில் கோவை கொடிசியா அருகே நெட்ஸ் வளாகத்தில் பல்வேறு லயன்ஸ் சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்ட இறகுப்பந்து போட்டி நடைபெற்றது.

ஓபன் பிரிவில் முதல் பரிசு அன்பில் – சரவண செல்வன் இணையர், இரண்டாம் பரிசு அரவிந்த் –
ராம்சந்தர் இணையர், மூன்றாம் பரிசு சுப்பிரமணி – பாலா இணையர், நான்காம் பரிசு ஆனந்த் – சிவப்பிரகாசம் இணையர் பெற்றனர்.

40 வயதுக்கு மேற்பட்டோர்க்கான பிரிவில், முதல் பரிசு கிருஷ்ண குமார் – சந்தோஷ் இணையர், இரண்டாம் பரிசு பாலகிருஷ்ணன் – ஸ்ரீனிவாஸ் இணையர், மூன்றாம் பரிசு திருமூர்த்தி – விஸ்வநாதன் இணையர், நான்காம் பரிசு சுரேஷ் – ரங்கநாதன் இணையர் பெற்றனர்.

மாவட்ட ஆளுநர் ராம்குமார், கூட்டு மாவட்ட தலைவர் கருணாநிதி, முன்னாள் ஆளுநர்கள் பழனிசாமி, சாரதாமணி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகர், சூரி நந்தகோபால், செல்வராஜ், மாவட்டபி.ஆர்.ஓ செந்தில்குமார் ஆகியோர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பையை வழங்கினர்.

மண்டல தலைவர் ரவி சங்கர், இண்டகிரிடி லயன்ஸ் சங்கத்தின் கணேஷ் ஷா, நந்தகுமார், கிருஷ்ணகுமார், ஆனந்த், லாவண்யா ரவிசங்கர், சித்ரா நந்தகுமார் ஆகியோர் இறகுப்பந்து போட்டியை நடத்தினர்.

இப்போட்டியில் கலந்து கொண்ட லயன்ஸ் வீரர்கள் அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்
வழங்கப்பட்டது.