ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான கணினித் திறன் போட்டி

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கணினித் தொழில்நுட்பம் தொடர்பான போட்டிகள் நடைபெற்றன.

இதில் கணினி அறிவியல் துறைத்தலைவர் தாஜுநிஷா அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சித்ரா தலைமையேற்றுப் பேசும்போது, கணினித் தொழில்நுட்பங்களில் ஆர்வமும் திறமையும் கொண்ட மாணவர்களுக்கான வாய்ப்பாகவும் அவர்களை அங்கீகரிக்கும் விதமாகவும் இப்போட்டிகள் அமையும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அருண் ஐஏஎஸ் அகாடமி மற்றும் அருண் வேலைவாய்ப்புப் பயிற்சியகத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான அகத்தமிழ் ஸ்ரீ அருண்குமார் கலந்து கொண்டு கல்லூரி மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள், அரசால் வழங்கப்படும் திறன் மேம்பாட்டுக்கான வழிகாட்டுதல்கள் பற்றியும், கணினித் துறையில் மாணவர்களுக்கு இருக்கும் பலவிதமான வாய்ப்புகள் பற்றியும் பேசினார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பல கல்லூரிகளிலிருந்து சுமார் 150 மாணவ மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.