ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் மருத்துவ கருத்தரங்கம்

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சார்பில் மருத்துவ அவசர கால சூழ்நிலையில் எப்படி துரிதமாக செயல்படுவது என்பது குறித்த விழிப்புணர்வை கோவை மாவட்டத்தில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஆப்ரேட்டர்களுக்கு எடுத்துரைக்க மருத்துவ கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் இயற்கை பேரிடர் (Code Yellow) பற்றி அவசர சிகிச்சை மருத்துவர் மஞ்சுநாதன் மற்றும் தீவிர அவசர சிகிச்சை குறித்த முதல் கட்ட நடவடிக்கை பற்றி அவசர சிகிச்சை மருத்துவர் பார்த்திபன் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஆப்ரேட்டர்களிடம் விரிவாக பேசினர்.

இந்த ஒரு நாள் கருத்தரங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் டீன் மற்றும் மருத்துவ இயக்குனர் டாக்டர் சுகுமாரன் மற்றும் எஸ். என்.ஆர் அறக்கட்டளையின் முதன்மை தலைமை அதிகாரி ராம்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

கோவை மற்றும் கோவையை சுற்றியுள்ள பல நகரங்களில் இருந்து 100 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஆப்ரேட்டர்கள் இந்த கருத்தரங்கில் பங்கு பெற்றனர்.