‘ப்யூச்சர்ஸ் ஸ்கில் ப்ரைம்’ சான்றிதழ் அதிகம் பெற்று கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி சாதனை

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை கற்றுத் தரும் தளமாக உள்ள ப்யூச்சர்ஸ் ஸ்கில் ப்ரைமில்,
குறுகிய காலத்தில் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் படித்து முடித்ததை கொண்டாடும் விதமாக “சக்சஸ் மீட்” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

ப்யூச்சர்ஸ் ஸ்கில் ப்ரைம் என்பது இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நாஸ்காம் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை இணைந்து வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை கற்றுத் தரும் தளமாக உள்ளது. இதில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பற்றிய அடிப்படை அறிவை கற்றுத் தந்து மாணவர்களின் திறமைகளை மேம்படுத்துவதோடு, இதனைக் கொண்டு மக்கள் சந்திக்கும் சவால்களுக்கு தீர்வு காணவும் உதவுகிறது.

நாஸ்காம்-ப்யூச்சர்ஸ் ஸ்கில் ப்ரைம் இந்திய அமைப்புடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு இந்தத் தளத்தில் புதிய தொழில்நுட்பங்களை பேராசிரியர்கள் கற்றுக்கொண்டு திறன்களை வளர்த்துக்கொள்வது மட்டுமல்லாது, தாங்கள் கற்றுக்கொண்டதை ஆர்வமுள்ள மாணவர்களுக்கு புதிய படத்திட்டத்திற்கு ஏற்ப கற்றுத்தரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பினை பெற்ற கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி இந்த தளத்தில் கணினி பொறியியல் துறை, உயிரி மருத்துவப் பொறியியல், ரசாயன பொறியியல், மானுடவியல், இயற்பியல் போன்ற அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களும் இந்த தொழில்நுட்பத்தில் பயின்றுள்ளனர். சுமார் 2800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இந்த படிப்பை முடித்து சான்று பெற்றவர்களாக திகழ்கின்றனர்.

குறுகிய காலத்தில் அதிக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் படித்து முடித்ததை கொண்டாடும் விதமாக “சக்சஸ் மீட்” நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நாஸ்காம் நிறுவனத்தின் முதன்மைச் செயலாளர் கீர்த்தி சேத், துணை இயக்குனர் உதய சங்கர், சுமித்ரா குமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

முதன்மைச் செயலாளர், அனைவரும் இந்த தளத்தில் புதிய தொழில்நுட்பங்களை தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்றார். துணை இயக்குனர், ப்யூச்சர்ஸ் ஸ்கில் ப்ரைம் சான்றிதழ் அதிகம் பெற்றுள்ள கல்லூரி என்ற சாதனையை பெற்ற கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியை பாராட்டி அவர்களுக்கு கோப்பை வழங்கினார்.