இந்துஸ்தான் கல்லூரி மாணவி குடியரசு அணிவகுப்புக்கு தேர்வு

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் இரண்டாமாண்டு வணிகவியல் துறையைச் சார்ந்த மாணவி கீர்த்தனா சென்னையில் நடைபெற உள்ள குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளார்.

நாளை சென்னையில் நடைபெற உள்ள குடியரசுதினவிழா அணிவகுப்பில் பாரதியார் பல்கலைக்கழத்தக்தின் சார்பாக தமிழக நாட்டுப் நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பாக பங்கேற்கவுள்ளார்.

இவர் அணிவகுப்பு பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசால் 15 நாட்கள் சென்னை சென்டரல் யுனிவர்சிட்டியில் பயிற்சி முகாமில் பங்கேற்று வருகிறார்.

இப்பயிற்சி முகாமில், அணிவகுப்பில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும், அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. பயிற்சி முகாமில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் நன்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு நாளை தமிழக அரசால் நடைபெறும் அணிவகுப்பு மரியாதையில் பங்கேற்கவுள்ளார்.

அணிவகுப்பு மரியாதையில் பங்கேற்கவுள்ள இம்மாணவியை இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா, முதல்வர் பொன்னுசாமி, நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கருணாநிதி, வினோத், அனிதா சோபியா மார்கரெட் ஆகியோர் பாராட்டினர்.