சிறந்த மாமன்ற உறுப்பினர் விருது பெறப்போகும் 10 பேர் யார்?

கோவை மாநகராட்சியில் பொதுமக்களுக்கு ஆற்றும் சேவைகளை பாராட்டும் விதத்திலும், ஊக்குவிக்கும் விதத்திலும், மாமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து, சிறந்த மாமன்ற உறுப்பினர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், மாமன்ற கூட்டத்திற்கு வருகை (10 மதிப்பெண்கள்), மாமன்றக் கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்குதல் (5 மதிப்பெண்கள்), நமக்கு நாமே திட்டத்திற்கான பங்களிப்பு (10 மதிப்பெண்கள்), திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயலாக்கத்தில் பங்களிப்பு (5 மதிப்பெண்கள்), பொது ஒதுக்கீட்டு இடம் (OSR) மீட்பு மற்றும் பராமரிப்பு பணியில் பங்களிப்பு (5 மதிப்பெண்கள்), வரிவசூலிப்புப் பணிகளில் பங்களிப்பு (10 மதிப்பெண்கள்), பொதுமக்களிடையேயுள்ள நன்மதிப்பு (5 மதிப்பெண்கள்) உள்ளிட்ட தலைப்புகளின்கீழ் (மொத்தம் மதிப்பெண்கள் 50) மண்டல அளவில் மாமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு 10 மாமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


மேற்கண்ட மாமன்ற உறுப்பினர்களுக்கு நாளை மாநகராட்சியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் மேயர் கல்பனா விருதுகள் வழங்க உள்ளார் என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.