ரோட்டரி ஆக்ருதி சார்பில் பழங்குடியினப் பெண்களுக்கு உதவிகள்

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஆக்ருதி மற்றும் தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து த்ரேலக்ஷா திட்டத்தின் கீழ் ‘வுமன்ஸ் எம்பவர்மெண்ட் இனிஷியேடிவ்’ ப்ராஜெக்ட், பொள்ளாச்சி டாப்சிலிபில் துவங்கியது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு தலைமை வனப் பாதுகாவலர் ராமசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராகவும், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் பார்கவ தேஜா கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

பழங்குடியினப் பெண்கள் மற்றும் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்துவதே த்ரேலக்ஷா திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தினை சிறப்பு மற்றும் கௌரவ விருந்தினர்கள், இந்த திட்டத்தின் தலைவர் லீமா ரோஸ் மார்ட்டின், துணை தலைவர் கவிதா கோபாலகிருஷ்ணன் மற்றும் ரோட்டரி 3201 மாவட்ட இயக்குனர் மயில்சாமி ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.

இதில் பழங்குடியினப் பெண்களுக்கு தையல் இயந்திரம் மற்றும் இலவச தையல் பயிற்சியும் வழங்கப்படுகிறது. மேலும், வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி தருகின்றனர்.

இந்நிகழ்வில் மார்ட்டின் பவுண்டேஷன் சார்லஸ் மார்ட்டின், ரோட்டேரியன்ஸ் வித்யா ரமேஷ் மற்றும் துளசிசேது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.