இந்துஸ்தான் கலை கல்லூரிக்கு ‘ஏ’ ++ தர வரிசை

கோவை நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேசிய தர நிர்ணயக் குழுவின் (நாக்) ‘ஏ’ ++ தர வரிசை அந்தஸ்து பெற்றுள்ளது.

கோவையில் உள்ள அனைத்து சுயநிதி பிரிவு கல்லூரிகளுடன் ஒப்பிடுகையில் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அதிக தரவரிசை மதிப்பெண் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா சதிஷ்பிரபு ஆகியோர் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.