சங்கரா கல்லூரியில் பொங்கல் விழா

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. உரியடித்தல், கயிறு இழுத்தல், பலூன் ஊதுதல், விவாத மேடை ஆகிய போட்டிகள் நடைபெற்றன. பேராசிரியர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் மற்றும் செயலாளர் ராமச்சந்திரன், இணைச் செயலர் சந்தியா ராமச்சந்திரன், துணை இணைச் செயலர் நித்யா ராமச்சந்திரன், கல்லூரி முதல்வர் ராதிகா, துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.