ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி சார்பில் வேளாண் திருவிழா

திரு செங்கோட கவுண்டர் கல்வி அறக்கட்டளை, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் ஐந்தாம் ஆண்டு வேளாண் திருவிழா இரண்டு நாட்கள் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கோவை ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மாதேஸ்வரன் கலந்து கொண்டு நிகழ்வைத் துவங்கி வைத்தார். கல்லூரியின் செயலாளர் தீபன் தங்கவேலு, துணை செயலாளர் சீலன் தங்கவேலு ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதல் நாள் நிகழ்வில் காங்கேயம் கால்நடை அழகு போட்டிகள் நடைபெற்றது. காளை வகைகளில் மயிலை காளை, செவலை காளை, காரிக்காளை என்று பல்வேறு வகையான காளைகளுக்கும் தனித்தனியே போட்டி நடைபெற்றது. நாட்டின ஆடு, நாய், சேவல், குதிரை ஆகியவையின்  கண்காட்சியும் நடைபெற்றது.

மேலும் புதிய அறிவியல் தொழில்நுட்பமென்பொருள்கள், கருவிகள், வங்கிக் கடன்கள்குறித்து வேளாண் வர்த்தக கண்காட்சியில் இடம் பெற்றன.

இரண்டாம் நாள் ரேக்ளா போட்டிகள் நடைபெற்றது. இதில் 300 க்கும் அதிகமான ரேக்ளா வண்டிகள் கலந்து கொண்டன. 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் என தனித்தனியாக போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 8 கிராம் தங்க நாணயம் உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.