விளையாட்டு போட்டியில் எஸ்.என்.எஸ் கல்லூரி சாதனை

டாக்டர்.எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளை பிபிஜி பிசியோதெரபி கல்லூரியில் நடத்தியது. இந்த விளையாட்டு போட்டியில் தமிழகம் முழுவதும் உள்ள 32 பிசியோதெரபி கல்லூரிகள் பங்கேற்றன.

இதில் எஸ்.என்.எஸ் பிசியோதெரபி கல்லூரி கோ-கோ போட்டியில் பெண்கள் அணி முதல் இடத்தையும், கையுந்துபந்து போட்டியில் பெண்கள் அணி இரண்டாவது இடத்தையும், கபடி போட்டியில் ஆண்கள் அணி 3 வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.