25 லட்சம் மதிப்புடைய 146 கைபேசிகள்: உரியவர்களிடம் வழங்கிய கோவை காவல் துறை

கோவையில் கடந்த சில மாதங்களில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புடைய 146 கைபேசிகளை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், உரியவர்களிடம் ஒப்படைத்தார்.