உதகையில் உறைபனியின் தாக்கம் அதிகரிப்பு

உதகையில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை பனிக்காலம் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தொடர் மழையின் காரணமாக பனிபொழிவு தாமதமாக துவங்கியுள்ளது.

இதனால் பகல் நேரங்களில் நல்ல வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கடுங்குளிரும் நிலவுகிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. இந்த காலநிலையை அனுபவிக்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் உதகை மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் அதிகாலை நேரங்களில் கடும் உறைபனி பொழிவு காணப்படுகிறது. மேலும், தொடர் மழையால் உறைபனி ஒரளவு குறைந்து காணப்பட்டது. தற்போது மழை குறைந்து விட்டதால் உறைபனியின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது.

தற்போது குளிரின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடுங்குளிர் காரணமாக உதகை நகரப்பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 3 டிகிரி செல்சியசும், சமவெளி பகுதியில் 0 டிகிரி செல்சியசும் பதிவாகி உள்ளது.