கோவையில் திருவையாறு பரதாலயம் சார்பில் நாட்டியம் அரங்கேற்றம்

கோவையில் திருவையாறு சீசன் 4 இசை நிகழ்ச்சி, பீளமேடு சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லுாரி அரங்கில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியகராஜசுவாமிகள், ராமபிரான் மீது பல நுாறு கீர்த்தனைகளை பாடியுள்ளார். அவரது நினைவாக திருவையாறில், ஆண்டுதோறும் இசைக்கலைஞர்கள் இசையஞ்சலி செலுத்துவர். இதற்காக பல நாடுகளிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் பல இசைக்கலைஞர்கள் சங்கமிப்பது வழக்கம். அது போன்ற நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக கோவையில் திருவையாறு என்ற பெயரில் மார்கழி மாதம் நடக்கிறது.

கலாசார திருவிழா என்ற பெயரில் டிசம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்த 2 நாட்களில் 20 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 600 இசைக் கலைஞர்கள், பாடகர்கள், வாத்தியக் கருவி வித்வான்கள், பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்றனர்.

இதன் ஒரு பகுதியாக பரதாலயம் இன்ஸ்டியூட் ஆஃப் பைன் ஆர்ட்ஸ் சார்பில் கோவையில் திருவையாறு நிகழ்ச்சியில், கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும் என்னும் பரதநாட்டியம் நிகழ்ச்சியை மாதுளா கிஷோர் குழுவினர் நடத்தினர்.

இது குறித்து பரதாலயம் இன்ஸ்டியூட் ஆஃப் பைன் ஆர்ட்ஸ் மாதுளா கிஷோர் கூறுகையில்: கோவையில் திருவையாறு 4 வது சீசனில் “கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும்” என்னும் கிருஷ்ணனின் லீலைகள் குறித்த நாடகத்தை ஒரு மணி நேரம் எங்களது குழுவினர் நிகழ்த்தி உள்ளோம் என்றார்.