மாணவர்களுக்கு 1 லட்சம் படுக்கை வசதியை 2024 க்குள் ஏற்படுத்த ஜோலா ஸ்டேய்ஸ் திட்டம்

இருபாலருக்குமான தங்கும் வசதியை அளித்து வரும் ஜோலா ஸ்டேய்ஸ், கோவை நேரு குழுமம் மற்றும் பிற நிறுவனங்களின் மாணவர்களுக்கான தங்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. ஜோலோவுடன் இணைந்த பிறகு, நேரு குழுமத்தின் தங்கும் வசதியை 55 சதவீதம் உயர்த்தியுள்ளது.

இங்கு மாணவர்களுக்கான தங்கும் வசதியில் மிகவும் வசதியான அறைகள், விளையாட்டு வசதிகள், ஜிம், நவீன கிச்சன் வசதி, சிறப்பான பராமரிப்பு, 24 மணி நேர பாதுகாப்பு மற்றும் பிற வசதிகள் உள்ளன.

ஜோலோஸ்காலர் 7 பல்கலைக்கழகங்கள், வணிககல்வி நிறுவனங்களுடன் இணைந்து, பெங்களுரு, சென்னை, கோட்டா, டில்லி என்சிஆர், மும்பை, கோயம்புத்தூர், புனோ, குருக்ரம், நொய்டா மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட 9 நகரங்களில் வசதியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 12000 படுக்கை வசதிளுடன் தங்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் 20,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்தவுள்ளது.

ஜோலா இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நிகில் சிக்ரி பேசியதாவது: மாணவர்களது வசதியையும், விடுதிக்கான அனுபவத்தையும் பெற தொடர்ந்து வசதிகளையும், பங்குதாரர்களுடன் இணைந்து ஏற்படு்த்தி வருகிறோம். அடுத்து ஆண்டு இறுதிக்குள், 20 ஆயிரம் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார்.

நேரு மேலாண்மை கல்லூரியின் முதல்வர் மோசஸ் டேனியல் பேசுகையில்: மாணவர்களின் தங்கும் வசதி மேலாண்மைக்காக மட்டுமின்றி, முழுமையான பொறுப்பேற்கும் அனுபவத்திற்காகவும் ஜோலோ உடன் இணைந்தோம். மாணவர்களுக்கு தேவையான சலவை வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்கவும், திட்டமிடப்பட்டுள்ளது. ஜேலோ 100 சதவீத தங்கும் வசதிகளையும் நிரப்பியுள்ளது என்பதில் பெருமை கொள்கிறோம் என்றார்.