இஸ்ரோவில் 526 காலி பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) உதவியாளர், எழுத்தர், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 526 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 2023 ஜனவரி 9 கடைசி தேதி.

ASSISTANT

காலியிடங்கள் – 342

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

JUNIOR PERSONAL ASSISTANTS

காலியிடங்கள் – 154

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

UPPER DIVISION CLERKS

காலியிடங்கள் – 16

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

STENOGRAPHERS

காலியிடங்கள் – 14

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

09.01.2023 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. சம்பளம் ரூ. 25,000.

எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://apps.ursc.gov.in/CentralOCB-2022/advt.jsp என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் ரூ. 100, இருப்பினும் SC/ST, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.