மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவி வழங்கிய அண்ணாமலை

கோவை தெற்கு மாவட்ட பாஜக மற்றும் அரிமா சங்கம் 324- சி இணைந்து மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு 100 நபர்களுக்கு (மாற்றுத்திறனாளிகளுக்கு) காது கேட்கும் கருவி மற்றும் செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்வு புதன் கிழமையன்று சுந்தராபுரம் பகுதியில் உள்ள பி.என் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உதவிகளை வழங்கினார்.