வொண்டர் வுமன் சார்பாக விழிப்புணர்வு மாரத்தான்

கோவை கொடிசியா சாலையில், கோவை வொண்டர் வுமன் அமைப்பின் சார்பாக, நடைபெற்ற ப்ரிடம் ரன் என்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 850 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

2 கிலோ மீட்டர் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் சம உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முன்னதாக இந்த போட்டியின் வாயிலாக, இனையதளம் மூலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், 5 பைக் ரைடர்ஸ் இங்கிருந்து புறப்பட்டு 14 நாட்கள் பயணம் செய்து நேபால் பகுதிக்கு செல்கின்றனர்.