கே.எம்.சி.ஹெச் சார்பில் உறுப்பு தான விழிப்புணர்வு

என்.ஜி.பி. பள்ளி மற்றும் கே.எம்.சி.ஹெச் இணைந்து உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாமினை நடத்தினர். இதில் என்.ஜி.பி. பள்ளி ஆசிரியர்களும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் ஹெபடாலஜிஸ்ட் & எண்டோஸ்கோப்பிஸ்ட் ஆலோசகர் டாக்டர் அருள்ராஜ் ராமகிருஷ்ணன், உறுப்பு தானம் குறித்த முக்கியத்துவத்தையும், மூளை சாவடைந்த நபரின் உறுப்புகள் மற்றும் திசுக்களை தானம் செய்வதில் உள்ள நடைமுறைகளையும் பற்றி எடுத்துரைத்தார்.

மேலும், உலக அளவில் தற்போதைய நன்கொடையாளர்களின் சதவிகிதத்தை உலக சுகாதார அமைப்பின் தரவுகளுடன் வலியுறுத்தினார். மற்ற வளரும் நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் தானம் செய்பவர்களின் சதவிகிதம் குறைவு. காரணம் தனிப்பட்ட மூட நம்பிக்கை அல்லது விழிப்புணர்வு இல்லாததால் பலர் தங்கள் உறுப்புகளை தானம் செய்ய விரும்பவில்லை என்றார்.

உடல் உறுப்புகளை நாம் நம்மால் இயன்ற அளவு இரு சக்கர வாகனம் மட்டுமல்லாமல் மிதிவண்டியில் தலைக்கவசம் அணிவதன் மூலம், போதைக்கு அடிமை ஆகாமல் இருந்து காத்துக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்.