கோவையில் கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதி

கோவையில் இன்று காலையில் கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதனால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருப்பதாலும், கேரள எல்லையில் இருப்பதாலும் கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதன்படி அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் வடகிழக்கு பருவமழை, பெய்துவருகிறது. வழக்கத்தை விட அதிகமாக பெய்து வரும் நிலையில் கோவையில் அதிகாலையில் பனி மூட்டம் நிலவியது.

காலை 9 மணி வரை இந்த பனிமூட்டம் நீடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றதை காணமுடிகிறது. குறிப்பாக கோவை-சிறுவாணி சாலை, நீலாம்பூர் சாலை ஆகிய பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியது.