“நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்”

– மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் ஒரு தொகுதியை இழந்துவிட்டோம், இந்த முறை 40 தொகுதியிலும் வெல்ல வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து நாம் போட்டியிடுவோம் என கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி. மற்றும் மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம் உள்பட மாநிலம் முழுவதிலும் உள்ள 72 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.