எஸ்.என்.எம்.வி கல்லூரியில் வணிக ஆலோசனை கருத்தரங்கம்

கோவை ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் (எஸ்.என்.எம்.வி) இளங்கலை கணினி தொழில்நுட்ப துறையும் மற்றும் கல்வி நிறுவனத்தின் புதுமையாக்க அமைப்பும் இணைந்து சிந்தனையைப் பயன்படுத்தி வடிவமைப்பு திறன்களை உருவாக்க வணிக ஆலோசனை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தினர்.

இக்கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக கோவை வீட்டி வைஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மைக் கண்காணிப்பாளர் ஷண்மதி கார்த்திக் கலந்து கொண்டு ஒரு தொழில்முனைவோர் சிறந்த திறன்கள், சிந்தனைகள், முறைகள், திட்டங்களை செயல்படுத்துவதற்கான உத்திகள் ஆகியவை அறிந்திருக்க வேண்டும் என பல வணிக ஆலோசனைகளை வழங்கினார்.

இக்கருத்தரங்கில் எஸ்.என்.எம்.வி கல்லூரி முதல்வர் மற்றும் ஐ.ஐ.சி தலைவர் சுப்பிரமணி தலைமையுரை வழங்கினார். இக்கருத்தரங்கில் 140 மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.