இந்துஸ்தான் கல்லூரி சார்பில் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு

கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் நுண்ணுயிரியல் துறை சார்பாக பேரூர் செட்டிபாளையத்தில் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கிராம பொது மக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் சாலை பாதுகாப்பு, மண்புழு உரம், கை கழுவுதல், உடல் ஆரோக்கியம் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், இந்த முகாம் டிசம்பர் 2 வரை நடைபெறும்.

இவ்விழிப்புணர்வில் மைக்ரோபயாலஜி துறைத்தலைவி லாலிகிரௌதர், அத்துறைப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் கருணாநிதி, வினோத், அனிதா சோபியாமார்கரேட் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் இம்முகாமின் துவக்கவிழாவில் இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், நிர்வாக செயலர் பிரியா, முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.