புரோசோன் மாலில் ‘பிளாக் ஃபிரைடே’ விற்பனை துவக்கம்

கோவை சரவணம்பட்டியில் அமைந்துள்ள புரோசோன் மாலில் இன்று முதல் வரும் டிசம்பர் 4-ம் தேதி வரை பிளாக் பிரைடே விற்பனை நடைபெற உள்ளது.

இது குறித்து புரோசோன் மாலின் தலைமை மேலாளர் (நிதி மற்றும் நிர்வாகம்) பாபு, மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பிரிங்ஸ்டன் நாதன், செயலியக்க தலைவர் முசாமில், செயலியக்கம் மற்றும் சந்தை பிரிவு தலைவர் முரளி ஆகியோர் கூறியதாவது: புரோசோன் மாலில் உள்ள 100 க்கும் மேற்பட்ட முக்கிய பிராண்டகங்களில் 50 சதவீதம் தள்ளுபடி தர உள்ளார்கள்.

ஹெச் எம், லைப் ஸ்டைல், எம் அண்ட் எஸ், குரோமோ, ரிலையன்ஸ் டிஜிட்டல், பெண்டலூன், டிரண்ட்ஸ், பீயிங் ஹியூமன், ஸ்பார், ஹை டிசைன், ஃபன் அன்லிமிடெட், ஆர்யா, ஸ்டிங், டபிள்யு, அடிடாஸ், ஸ்கெட்ச்சர்ஸ், தி பேபி ஷாப், ஜஸ்ட் வாட்சஸ், டேனியல் வெலிங்டன், விஐபி போன்ற நிறுவனங்களின் எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோக பொருட்கள், மொபைல் அக்ஸசரீஸ் போன்றவற்றிற்கு இந்த சலுகை கிடைக்கும்.

நேற்று நவம்பர் 24-ம் தேதி அன்று புகழ்பெற்ற இசைக்கலைஞர் சாம் விஷால் லைவ் பேண்ட் காம்பெடிஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று பிரபல பேஷன் ஷோ கலைஞர் சுருதிஹாவின் பேஷன் ஷோ நிகழ்ச்சியும் நாளை 26-ம் தேதி திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகர் புகழ் பங்குபெறும் டான்ஸ் போட்டி மற்றும் காமெடி நிகழ்ச்சி நடைபெற உள்ளது என தெரிவித்தனர்.