கோவையில் கால்நடைகளை கொன்று வந்த சிறுத்தையை பிடித்து வனத்திற்குள் விட்டனர்

கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த  மூன்று மாதங்களாக சிறுத்தை ஒன்று கால்நடைகளை கொன்று வந்தது . இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்தனர். பின்னர் வனத்துறையினரின் தீவிர தேடுதலுக்கு பின்னர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க முயற்சித்தனர் . இதனால் அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறை அமைத்த கூண்டில் சிக்கியது. வனத்தை நோக்கி குடியிருப்புகள் விரிவாக்கம் செய்யப்படுவதே மனித விலங்கின மோதல் அதிகரிக்க காரணம் என  வன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் . இந்நிலையில் கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட சிறுத்தையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று , வனத்திற்குள் விட்டனர் .