தடுப்பணை உடைப்பை சரி செய்ய கோரிக்கை

கோவையை அடுத்த ஈச்சனாரி பகுதியில் உள்ள தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் , தண்ணீர் வீணாகி வெளியேறுவதால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர் .  கோவையை அடுத்த ஈச்சனாரி பகுதியில்

1975 ஆம் ஆண்டு வரட்சி நிவாரணப்பணி மூலமாக தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அந்த தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் , அப்பகுதியில் தேக்கி வைக்கப்பட்டு உள்ள தண்ணீர் முற்றிலும் வீணாகி செல்கிறது . இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் . இந்த தண்ணீர் முழுவதும் வீணாகி கேரளாவிற்கு செல்வதாக கூறப்படுகிறது . இந்நிலையில் உடனடியாக இந்த தடுப்பணை அரசு சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர் . மழைக்காலங்களில் இந்த பகுதியில் அதிகளவிலான நீரை தேக்கி வைக்க முடியும் என்பதால் , விரைவில் அடுத்த பருவமழைக்குள் தடுப்பணை உடுப்பி சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர் .