கேரள மக்கள் சகஜ நிலைக்கு திரும்ப மத்திய அரசு உதவும் – மத்திய அமைச்சர் உறுதி

பழங்குடியின மக்களின் பண்பாட்டு பதிவுகள் என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கம் இன்று கோவையில் நடைபெற்றது. உதகமண்டலத்திலுள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை மத்திய  பழங்குடியின நலத்துறையின்  இணை அமைச்சர் திரு சுதர்சன் பகத் தொடங்கி வைத்தார். இதையொட்டி இடம் பெற்றிருந்த புகைப்பட  கண்காட்சியையும் அமைச்சர் திறந்து வைத்தார். தமிழகத்தில் உள்ள 36 பண்டைய பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக மத்திய  அரசு மேற்கொண்டு வரு பல்வேறு திட்டங்கள் குறித்து  பட்டியலிட்டார்.  கருத்தரங்கில் வானதி சீனிவாசன், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு மைய நிறுவனர் பக்தவத்சல பாரதி,  தமிழக பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குநர் M. சுப்ரமணியம் உட்பட பலர்  கருத்தரங்கில் உரையாற்றினர்.  இதையடுத்து செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர்  கேரளா மாநிலத்தில் நிகழ்ந்த இயற்கை சீற்றம் மற்றும் வெள்ளம் எதிர்பாராத ஒன்று எனவும் , பிரதமர் மோடி கேரளா மாநில வெள்ள சேதங்களை  நேரில் பார்வையிட்டுள்ளதாகவும் , மத்திய அரசு கேரளா மாநிலத்திற்கு அனைத்து உதவிகளை அளிக்கும் என்றார்.  கேரளா மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பும் வரை மத்திய அரசு உதவி புரியும் என்றும்,  கேரளா மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்து  வர பிரதமர் மோடி அனைத்து முயற்சிகளை மேற்கொள்வர் என்றார்.