டார்சா ரிசார்ட்டில் கிறிஸ்துமஸ் ‘கேக் மிக்ஸிங்’ நிகழ்ச்சி

கோவை பன்னிமடையில் அமைந்துள்ள டார்சா ரிசார்ட்டில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக்காக கேக் மிக்ஸிங் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரிசார்ட்டின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திர பிரசாத், ப்ரீத்தி பிரசாத் கேக் கலவை நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

பாரம்பரிய முறையில் கேக் தயாரிப்பதற்காக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், சுமார் 50 கிலோ எடை கொண்ட உலர் பழ வகைகள், பாதாம், முந்திரி உள்ளிட்ட பருப்பு வகைகள் ஆகியவை பழ ரசம் மற்றும் உயர்ரக மதுவில் ஊற வைக்கப்பட்டது.

சுமார் ஒரு மாத கால அளவில் ஊற வைக்கப்படும் இவை, கிறிஸ்துமஸின் போது கேக் செய்யப் பயன்படுத்தப்படும். இந்த கலவையில் இருந்து சுமார் 75 கிலோ முதல் 100 கிலோ வரை பிளம் கேக் தயாரிக்க முடியும் என்றும் ரிசார்ட்டின் பொது மேலாளர் சத்யா மற்றும் செஃப் ராஜேஷ் தெரிவித்துள்ளனர்.

இந்த ரிசார்ட்டில் 36 தனிதனி ஆடம்பர வில்லாகள், நான்கு விருந்து அரங்குகள், ஒரு திறந்த புல்வெளி அரங்கு, குழந்தை மற்றும் பெரியவர்களுக்கான தனி தனி நீச்சல் குளங்கள் மற்றும் ஒரு குடிசை அரங்கு உள்ளது. மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கு, உடற்பயிற்சி கூடம், பொழுது போக்கு அறைகள் உள்ளன.