பஞ்சு மிட்டாய் கண்டுபிடிக்கப்பட்ட கதை

சிறு வயதில் பஞ்சு மிட்டாய் சுவைக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பஞ்சு மிட்டாய் ஒரு பல் மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மிட்டாய். கோவில் திருவிழாக்களில் இது அதிகம் காணப்படும்.

குழந்தைகளுக்கு அதிகம் பிடித்த இந்த பஞ்சு மிட்டாய் ஒரு மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

பல் மருத்துவர் வில்லியம் மோரிசன் மற்றும் மிட்டாய் தயாரிப்பாளர் ஜான் சி. வார்டன் ஆகியோர் இயந்திரத்தால் சுழற்றி எடுக்கப்படும் பஞ்சு மிட்டாயை 1897 இல் கண்டுபிடித்தனர்.

இது முதன்முதலில் 1904 உலக கண்காட்சியில் ஃப்பெய்றி ஃப்ளோஸ்” (fairy floss) என்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் இன்னொரு பல் மருத்துவரான ஜோசப் லாஸ்காக்ஸ் 1921 ஆம் ஆண்டில் இந்த இயந்திரத்தை மீண்டும் கண்டுபிடித்தார்.

அவர் “காட்டன் கேண்டி” என்ற பெயரைக் கொண்டு வந்தார். நம்மூரில் இது பஞ்சுமிட்டாய் என்று சொல்லப்பட்டது.