நேஷனல் மாடல் பள்ளியில் கெரியர் கைடன்ஸ் நிகழ்ச்சி

கோவை, நேஷனல் மாடல் குரூப் ஆஃப் ஸ்கூல்ஸில் “கெரியர் பாத்” என்ற கெரியர் கைடன்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சி நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது.

இந்நிகழ்வினை பள்ளி தாளாளர் மோகன் சந்தர் மற்றும் செயலர் உமா மோகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

இதில் பல்வேறு கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் பங்கேற்று மாணவர்களுக்கு அவர்களுடைய எதிர்கால மேற்படிப்பைப் பற்றிய தெளிவான தகவல்களை நேரடியாக விளக்கினர். இதில் 1300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மேல்நிலைக்கல்விக்கான பிரிவுகளைத் தேர்வு செய்வதற்கும் நிகழ்ச்சி உதவியாக இருந்தது.

இந்நிகழ்ச்சியை மெட்ரிக் பள்ளி முதல்வர் பேபி மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர் கீதா ஆகியோர் முன்னின்று நடத்தினர்.