எஸ்.என்.எஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி

எஸ்.என்.எஸ் பாரா மெடிக்கல் இன்ஸ்டிடியூஷனில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் விருந்தினராக டாக்டர் சதீஷ்குமார் கலந்துக் கொண்டார். எஸ்.என்.எஸ் செவிலியர் கல்லூரியின் முதல்வர் கவிதா பழனிசாமி வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் மற்றும் எஸ்.என்.எஸ் கல்லூரியின் நிறுவனர் சுப்ரமணியன் ஆகியோர் மாணவர்களுக்கு அவர்களுடைய கல்லூரி வாழ்க்கைக்கும், தொழிலுக்கும் தேவையான வழிகாட்டுதலை வழங்கினர்.

நிகழ்வில் எஸ்.என்.எஸ் தொழில் நுட்பக் கல்லூரியின் முதல்வர் செந்தூர் பாண்டியன் சிறப்புரை வழங்கினார்.

எஸ்.என்.எஸ் இணை சுகாதார அறிவியல் கல்லூரியின் முதல்வர் சுமதி நன்றியுரை வழங்கினார்.