கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்குவது மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை மாநகர மேயர் கல்பனா துவங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 70 தூய்மை பணியாளர்களுக்கு, சீருடை, குளியல் சோப்பு, காலணி, துண்டு ஆகியவற்றை மேயர் கல்பனா ஆனந்தகுமார் வழங்கினார். இதேபோல், கோவை மாநகராட்சி முழுவதும் உள்ள 2306 தூய்மை பணியாளர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

தொடர்ந்து, உக்கடம் குளக்கரையில் 250 மரக்கன்றுகள் நடும் பணியை மேயர் கல்பனா துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணைமேயர் வெற்றிச்செல்வன், துணை ஆணையர் ஷர்மிளா, மண்டல தலைவலர் மீனாலோகு, பணிக்குழு தலைவர் சாந்திமுருகன், வரிவிதிப்பு, நிதிக்குழு தலைவர் முபசீரா, மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.