நேரு பொறியியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மேலாண்மை துறை மற்றும் இடிஃபை டெக் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக ஆராய்ச்சி ஒத்துழைப்பு, மாணவர் மற்றும் ஆசிரியர் கல்வி பரிமாற்றம், முதுகலை மாணவர்களுக்கான கூட்டு மேற்பார்வை, கூட்டு மாநாடுகள், பங்குச் சந்தை விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஆராய்ச்சி ஒத்துழைப்பு போன்ற விஷயங்களில், இரு கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் மற்றும் முதுகலை மாணவர்கள், மாணவ ஆராய்ச்சியாளர்கள் பயன்பெறுவர்.

நிகழ்ச்சியில் இடிஃபை டெக் இயக்குனர் பிரபாகரன், கல்லூரி மேலாண்மை துறை இயக்குனர் விஜய ராஜகுமார், கல்லூரி முதல்வர் மணியரசன் பங்கேற்றனர். மாணவர்கள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மென்பொருளில் கற்று, பயிற்சி பெற்று அதன் மூலம் சிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற உதவும் என கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.