ஆர்.வி கல்லூரியில் பட்டிமன்றம்

காரமடை, டாக்டர்.ஆர். வி கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் லோட்டஸ் தொலைக்காட்சியுடன் இணைந்து நடத்திய “ஒரு வீட்டின் சிறப்பிற்கு காரணம் மகனா? மகளா? என்ற தலைப்பில் தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரூபா தலைமை உரையாற்றினார். கோவையைச் சேர்ந்த தமிழ்ப்பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் அன்புசிவா நடுவராக பங்கேற்று பட்டிமன்றத்தை நடத்தினார்.

இந்த பட்டிமன்றத்தில் மகனே! என்ற அணியில் சந்திரவதனி, கிருஷ்ணானந்த் மற்றும் சிநேகா ஆகியோரும், மகளே! என்ற அணியில் ரிஸ்னா, சதீஷ் மற்றும் தாரணி ஆகியோரும் பங்கேற்று தங்கள் திறமையான வாதங்களை எடுத்துரைத்தனர்.

இறுதியில் நடுவர் வீட்டின் சிறப்பிற்கு காரணம் மகனே! என்று தீர்ப்பு வழங்கி பட்டிமன்ற பேச்சாளர்களுக்கு நினைவுப்பரிசினை வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் நிர்வாக மேலாளர் சீனிவாசன், அனைத்து துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.